காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்திவரும் பாரத் ஜோடோ நடைபயணத்தில் அவரைக் கண்டதும் ஒரு சிறுமி மகிழ்ச்சியில் தனது உணர்வுகளை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்திவரும் பாரத் ஜோடோ நடைபயணத்தில் அவரைக் கண்டதும் ஒரு சிறுமி மகிழ்ச்சியில் தனது உணர்வுகளை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தி கடந்த 7ம் தேதி முதல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரத் ஜோடோ யாத்திரை சென்று வருகிறார். 150 நாட்களுக்கு மேலாக நடக்கும் இந்த நடைபயணத்தில் 12 மாநிலங்கள் 2 யூனியன்பிரேதசங்கள் கடந்து, 3500கி.மீ தொலைவுக்கும் அதிகமாக ராகுல்காந்தி நடைபயணம் செல்ல உள்ளார்.

தமிழகத்தில் கன்னியாகுமரிமாவட்டத்தில் தொடங்கிய பாரத் ஜோடோ நடைபயணம் கேரளாவை கடந்த 10ம் தேதி சென்றடைந்தது. 18வது நாளை எட்டியுள்ள யாத்திரை தற்போது கர்நாடக எல்லையை அடைய உள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று தனது தொகுதியான வயநாடு பகுதியில் நடைபயணம் சென்றார்.

அப்போது, ராகுல் காந்தியை பார்த்த மகிழ்ச்சியில் ஒரு சிறுமி மகிழ்ச்சியில் குதித்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த ராகுல் காந்தி அந்த சிறுமியை அழைத்து தன்னுடன் சேர்ந்து நடக்க வைத்தார். 

ராகுல் காந்தி பார்த்த்தே தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என நினைத்திருந்த அந்த சிறுமி ராகுல்காந்தியுடன் நடந்து செல்வதை நினைத்து மகிழ்ச்சியில் குதித்தார், சிறிது நேரத்தில் தனது மகிழ்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

Scroll to load tweet…

இதைப் பார்த்த ராகுல் காந்தி, அந்த சிறுமியை தனது தோளோடு அனைத்துக்கொண்டு சிறிது தொலைவு நடந்தார். அந்த சிறுமியிடம் என்னுடன் நடைபயணத்துக்கு வருகிறாயா, மற்றவர்களும் என்னுடன் வருகிறார்கள் என்று கேட்டு, அழுத அந்த சிறுமியை ராகுல் காந்தி அமைதிப்படுத்தினார்

ராகுல் காந்தியைக் கண்டதும் சிறுமி கதறி அழும் வீடியோவை, காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீனிவாஸ் ட்விட்டரி்ல பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு தலைப்பாக, “ தலைப்புதேவையில்லை, அன்பு மட்டும்தான்” எனப் பதிவிட்டுள்ளது

Scroll to load tweet…

ராகுல்காந்தி சிறுமியை தனது தோளில் தூக்கி வைத்து கொஞ்சும் புகைப்படமும் வைரலாகி வருகிறது. 
 இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்ட விவசாயிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். மலப்புரம் மாவட்டம், பட்டிக்காடு பகுதியில் இந்த சந்திப்பு நடந்தது.