சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். 

மேற்கு வங்கத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் வந்துள்ளார். பின்னர் இரவு 11 மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே மாதவரம் செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார். இதனை கவனித்த ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணிடம் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என கேட்டபோது மாதவரம் என கூறியுள்ளார். நானும் அங்கு தான் செல்கிறேன் என கூறி அழைத்துள்ளார். சந்தேகமடைந்த அந்த பெண் மறுத்த போதும், வலுக்கட்டாயமாக மிரட்டி அவரை ஏற்றி ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். சிறிது தூரத்தில் தனது கூட்டாளிகள் இரண்டு பேரை ஆட்டோவில் ஏற்றியுள்ளார். பின்னர் கத்தி முனையில் 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இதையும் படிங்க: ஊருக்கு உபதேசம் செய்யும் கனிமொழி! தெருவுக்கு தெரு டாஸ்மாக்! உங்கள் சொந்த குடும்பத்தை முதலில் தட்டிக் கேளுங்கள்

அப்போது அந்த பெண் அலறியப்படி கூச்சலிட்டதை அடுத்து அந்த வழியாக சென்றவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் ஆட்டோவை பின்தொடருவதை அறிந்த அந்த கும்பல் சிறுமியை கோயம்பேடு பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து சிறுமியை மீட்ட காவல்துறையினர், தப்பிச்சென்ற மூவரையும் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தலைநகர் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்காக, வேண்டுமென்றே திமுக அரசு மெத்தனமாக இருக்கிறதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வெளியே, 18 வயது சிறுமி ஒரு ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். சிறுமியின் கூக்குரலைக் கேட்ட ஒரு நல்ல மனிதர், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து, அந்தச் சிறுமியைக் காப்பாற்றியிருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை ஒரு தினசரி பயங்கரமாக மாறிவிட்டது, போதைப்பொருள் என்பது, எங்கும் கிடைக்கும் பொருளாக மாறிவிட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில், 2022லிருந்து 2024 வரை, தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1122 மட்டுமே. கடந்த 2021 ஆம் ஆண்டில் (ஒரே வருடத்தில்), போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,632 ஆகும். 

தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் மெத்தபட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் போதைப் பொருள் கைதுகள் குறைந்து வருகின்றன. எப்படி? போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்காக, வேண்டுமென்றே திமுக அரசு மெத்தனமாக இருக்கிறதா? நமது சகோதரிகள் இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்படுவதற்காக, அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? என அண்ணாமலை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.