MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஊருக்கு உபதேசம் செய்யும் கனிமொழி! தெருவுக்கு தெரு டாஸ்மாக்! உங்கள் சொந்த குடும்பத்தை முதலில் தட்டிக் கேளுங்கள்

ஊருக்கு உபதேசம் செய்யும் கனிமொழி! தெருவுக்கு தெரு டாஸ்மாக்! உங்கள் சொந்த குடும்பத்தை முதலில் தட்டிக் கேளுங்கள்

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைப்பது மரியாதை அல்ல, அவரது வார்த்தைகளை நடைமுறைப்படுத்துவதுதான் உண்மையான அஞ்சலி என்று கனிமொழி கூறியிருந்தார். இதற்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 05 2025, 11:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஊருக்கு உபதேசம் செய்யும் கனிமொழி! தெருவுக்கு தெரு டாஸ்மாக்! உங்கள் சொந்த குடும்பத்தை முதலில் தட்டிக் கேளுங்கள்! வானதி சீனிவாசன் அட்டாக்!

ஊருக்கு உபதேசம் செய்யும் கனிமொழி! தெருவுக்கு தெரு டாஸ்மாக்! உங்கள் சொந்த குடும்பத்தை முதலில் தட்டிக் கேளுங்கள்! வானதி சீனிவாசன் அட்டாக்!

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எம்.பி.க்கள் பேசினர். அப்போது திமுக எம்.பி. கனிமொழி 
சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 3,000 கோடியில் சிலை வைப்பது அவருக்கு மரியாதை செலுத்துவதாக அமையாது. பட்டேலின் வார்த்தையை புரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்துவது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என கூறியிருந்தார். இந்நிலையில் வள்ளுவர் மற்றும் வள்ளலார் ஆகியோரின் காவலர்கள் போல தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் உங்கள் தமையன் மு.க.ஸ்டாலின் அவர்களும், திமுக  தலைவர்களும் அந்த மகான்கள் கடைபிடித்த இந்து வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றத் தயாரா? என கனிமொழிக்கு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில்: ஊருக்கு உபதேசம் செய்யும் கனிமொழி அவர்களே. சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்தால் மட்டும் போதாது அவரின் வார்த்தைகளைப் பின்பற்றுங்கள் எனக் கொந்தளிக்கும் நீங்கள், கள்ளுண்ணாமையை போதித்த அய்யன் வள்ளுவனுக்கு வானளவு பெரிய சிலையை வைத்துவிட்டு தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடையைத் திறந்து வைத்திருக்கும் உங்கள் சொந்தக் குடும்பத்தை முதலில் தட்டிக் கேளுங்கள்.

35
இந்துக்களின் நம்பிக்கை

இந்துக்களின் நம்பிக்கை

திருமால், பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட இந்துக் கடவுள்களைப் போற்றித் துதித்த தெய்வப்புலவருக்கு “வள்ளுவர் கோட்டம்” என்ற வரலாற்றுச் சின்னம் அமைத்த குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள், “திருப்பதி உண்டியலை அந்தப் பெருமாளே பாதுகாக்க வேண்டியதுதானே எதற்கு போலீஸ் பந்தோபஸ்து” என பகுத்தறிவு என்ற பெயரில் இந்துக்களின் நம்பிக்கையின் மீது தொடர்ந்து கல்லெறிவது ஏன்? தலைவர்களுக்கு சிலை மட்டும் வைத்தால் போதும் அவர்களின் சிந்தனைகள் எதற்கு என்று நினைத்துவிட்டீர்களா?

45
மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

வள்ளுவர் மற்றும் வள்ளலார் ஆகியோரின் காவலர்கள் போல தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் உங்கள் தமையன் மு.க.ஸ்டாலின் அவர்களும், திமுக  தலைவர்களும் அந்த மகான்கள் கடைபிடித்த இந்து வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றத் தயாரா என்பதை உறுதிசெய்தீர்களா?

55
கனிமொழி

கனிமொழி

இவ்வாறு உங்கள் சொந்தக் குடும்பத்திற்குள்ளும் கட்சிக்குள்ளும் நிலவும் இரட்டை நிலைப்பாட்டைக் கேள்விக் கேக்காமல், “ஒற்றுமையே பலம்” என்று முழங்கிய இரும்பு மனிதர் பட்டேல் அவர்களுக்கு சிலை வைத்து பெருமைப்படுத்தியது மட்டுமன்றி, “இது ஒரே தேசம் நாம் அனைவரும் சமம்” என அவரின் சிந்தனைகளையும் இன்று வரை போற்றி வரும் பாஜகவினரை குறைகூற உங்களுக்கு எந்த உரிமையும் தகுதியும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிஜேபி
திமுக
கனிமொழி
டாஸ்மாக் கடை
வானதி சீனிவாசன்
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annamalai: ஆட்டத்தை தொடங்கும் அண்ணாமலை.! திமுக, அதிமுகவை மொத்தமாக காலி செய்ய மாஸ் திட்டம்.! இனி விஜய்க்கும் - அண்ணாமலைக்குமே போட்டியாம்.!
Recommended image2
Business Training: நீங்களும் தொழிலதிபராகலாம்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! அரசின் சூப்பர் அறிவிப்பு!
Recommended image3
Ration: வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! தேதி குறித்த தமிழக அரசு! முழு விவரம் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved