இரண்டு சக்கர வாகனத்தில் மது பாட்டில் கடத்திய இளம்பெண் புதுவையில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு இரண்டுசக்கர வாகனத்தில் மதுபாட்டில் மற்றும் சாராயம் கடத்தி உள்ளார் இளம்பெண் அனுசுயா.

ஆல்பேட்டை சோதனை சாவடி

ஆல்பேட்டை சோதனை சாவடியில்  சோதனையில் ஈடுபட்டு இருக்கும் போது, 

100 மது பாட்டில் 120 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்த அனுசுயா போலீசாரிடம் சிக்கினார்.

24 வயதான்  அனுசுயா, தன்னுடைய  கணவருடன்  சேர்ந்து  இது போன்று பலமுறை  கடத்தல் செய்து வந்துள்ளாரா என்ற பாணியில் போலீசார் தீவிர விசாரணை  மேற்கொண்டு வாருகின்றனர்.

அனுசுயா கைதான  செய்தியை அறிந்த கணவர் லெனின் குமார், தலைமறைவாகி  உள்ளார்.இவரை போலீசார்  தேடி வருகின்றனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.ஒரு இளம்பெண் தைரியமாக இந்த செயலில் ஈடுபட்ட தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.