தமிழ்நாடு அமைதியான மாநிலம்... போலி வீடியோவைப் பரப்பி அமைதியை சீர்குலைக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு போன்ற அமைதியான மாநிலத்தில் போலி வீடியோக்களை பரப்பி அமைதியை சீர்குலைக்க கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களைப் பரப்பியது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனுவை விசாரித்தது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருப்பதை ரத்து செய்யக் கோரிய அவரது மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், நிவாரணம் கோருவதற்கு உயர் நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த விசாரணையின் போது, இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்து உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், காஷ்யப்பை சமூக ஊடகங்களில் ஆறு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள் எனவும் அவரது வீடியோக்கள் தமிழகத்தில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடையே பீதியையும் ஏற்படுத்தி இருப்பதாவும் தெரிவித்தார்.
விமானப் படையின் மிக் 21 ஜெட் விமானம் விபத்து: கிராமவாசிகள் இருவர் பலி!
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில் காஷ்யப்பின் செயல்கள் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதிக்கக்கூடியவை என்றும் பேச்சு சுதந்திரம் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், திங்கட்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த விவகாரம் குறித்து கருத்து முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். விசாரணை தொடங்கிய உடனேயே, தலைமை நீதிபதி சந்திரசூட், "உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? நீங்கள் இதைப் போன்ற போலி வீடியோக்களை பரப்புகிறீர்களே..." என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழ்நாட்டைப் பற்றி கூறும்போது 'அமைதியான மாநிலம்' என்றும் குறிப்பிட்டார். "தமிழ்நாடு போன்ற அமைதியான மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் போலி வீடியோக்களை பதிவிடக் கூடாது" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இந்தியாவில் கட்டுக்குள் இருக்கும் உணவுப் பணவீக்கம்! பொருளாதார நிபுணர் ஷமிகா ரவி பாராட்டு