இந்தியாவில் கட்டுக்குள் இருக்கும் உணவுப் பணவீக்கம்! பொருளாதார நிபுணர் ஷமிகா ரவி பாராட்டு
பிரதமரின் பொருளாதார ஆலோசகர் குழுவைச் சேர்ந்த ஷமிகா ரவி இந்தியாவின் உணவு பணவீக்க விகிதம் 4.79 சதவீதமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளார்.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உணவு பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்துள்ளது என பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினரும் பேராசிரியருமான ஷமிகா ரவி தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் உணவு பணவீக்க விகிதங்கள் அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்ட பேராசிரியர் ஷமிகா ரவி, உலக நாடுகளின் உணவுப் பணவீக்கம் குறித்த பட்டியலை பகிர்ந்துள்ளார். அதில், வேர்ல்டு ஆஃப் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் (World of Statistics) என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள 33 நாடுகளில் உணவு பணவீக்க விகிதங்களின் பட்டியலை ஷமிகா ரீட்வீட் செய்திருக்கிறார்.
இந்த தொழிலைத் தொடங்கினால் லாபம் ஈட்டலாம்...என்ன் அது...!
"உணவு பணவீக்கம்: லெபனான் 352 சதவீதம், வெனிசுலா 158 சதவீதம், அர்ஜென்டினா 110 சதவீதம், ஜிம்பாப்வே 102 சதவீதம், துருக்கி 53.92 சதவீதம், பாகிஸ்தான் 48 சதவீதம், போலந்து 24 சதவீதம், செக்கியா 23.5 சதவீதம், ஜெர்மனி 21.2 சதவீதம், ஸ்வீடன் 19 சதவீதம், ஐக்கிய இராச்சியம் 19.1 சதவீதம், நெதர்லாந்து 19.1 சதவீதம், நெதர்லாந்து 14.9 சதவீதம், தென்னாப்பிரிக்கா 14 சதவீதம், இத்தாலி 12.6 சதவீதம், மெக்சிகோ 11.01 சதவீதம், கனடா 8.9 சதவீதம், அமெரிக்கா 8.5 சதவீதம், ஆஸ்திரேலியா 8 சதவீதம், ஜப்பான் 7.8 சதவீதம், சிங்கப்பூர் 7.7 சதவீதம், பிரேசில் 7.29 சதவீதம், சுவிட்சர்லாந்து 5.4 சதவீதம், தென் கொரியா 5 சதவீதம், இந்தியா 4.79 சதவீதம், இந்தோனேசியா 4.58 சதவீதம், ரஷ்யா சீனா 2.54 சதவீதம், சவூதி அரேபியா 2.57 சதவீதம், காங் 1.6% சதவீதம், லைபீரியா -2.47%"
இந்தப் பட்டியலில் இந்தியாவின் உணவு பணவீக்க விகிதம் 4.79 சதவீதமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி தனது கருத்தைக் கூறியுள்ள அவர், "சபாஷ் இந்தியா - இதுபோன்ற கடினமான உலகளாவிய காலங்களில் உணவுப் பணவீக்கத்தை மிகச் சிறப்பாக நிர்வகிப்பதற்காக 👏" என்று குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூருவில் ஸ்கூட்டரில் சென்று டெலிவரி ஊழியர்களுடன் தோசை சாப்பிட்ட ராகுல் காந்தி!