உதயநிதி ஸ்டாலினின் கொசுவர்த்தி சுருள் பதிவுக்கு அன்பில் மகேஷ் ஃபையர் எமோஜி விட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்

“டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்.” என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், தான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.

அத்துடன், தனக்கு எதிரான கருத்துக்களை கிண்டலடித்தும் கடந்து செல்கிறார் உதயநிதி ஸ்டாலின். அந்த வகையில், தற்போது கொசுவர்த்தி சுருள் படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். வேறு எந்த கருத்தையும் அவர் அதில் தெரிவிக்கவில்லை. சனாதனத்தை டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களுடன் ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், தற்போது கொசுவை ஒழிக்க பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்துள்ளார்.

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவதில் தொடரும் சிக்கல்..! அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்ற நீதிபதி

சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதியையும், அப்போது அமைதியாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் பதவி விலக வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…

அந்த வகையில், உதயநிதி ஸ்டாலினின் நண்பரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘நீ விளையாடு நண்பா’ என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, உதயநிதி ஸ்டாலினின் கொசுவர்த்தி சுருள் பதிவுக்கு ஃபையர் எமோஜி விட்டுள்ளார்.