உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை.. 23 அடி உயரம், 15 டன் எடை.. கும்பகோணத்தில் குவிந்த பக்தர்கள் !!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடி கிராமத்தில் தயாரிக்கப்பட்டுள்ள 23 அடி உயர நடராஜர் சிலையின் வழிபாட்டு நிகழ்வில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், திம்மகுடியில் தயாரிக்கப்பட்டுள்ள 23 அடி உயர நடராஜர் சிலை சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில் இன்று தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆழமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று வழிபாடு செய்தார்.
கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற சிற்பச்சாலையை சேர்ந்தவர்கள் இந்திய அரசின் ஆர்டரின் பெயரில், கடந்த 2003 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்திற்கு சோழர் காலத்து சிற்ப சிலைகளைப் போல் வடிவமைத்து 11 அடி உயரம் கொண்ட நடராஜ சிலையை தயாரித்து வழங்கி உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..“15 நாள் டைம்.. அதுக்குள்ள எல்லாம் செஞ்சு முடிக்கணும், இல்ல.? அமைச்சர் சேகர்பாபுவுக்கு எச்.ராஜா வார்னிங் !”
23 அடி நடராஜர் ஐம்பொன் விக்ரகம் ஆரம்பிக்பெற்று ஒற்றை வார்ப்பு முறையில் உருவாக்கப் பெற்றுள்ளது.அதன் மேல் சிவ அச்சரங்கள், தீச்சுடர்கள் கொண்டு அமைக்கப்பட்டு கலை நயத்துடன் கொண்டதாக திட்டமிட்டப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற பணி நிறைவடைந்து. 23 அடி உயரமும் 17 அடி அகலமும் சுமார் 15,000 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய ஆனந்த தாண்டவ நடராஜர் சிலையாக உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிலையில் 51 சிவ அட்சரத்தை குறிக்கும் வகையில், 51 தீச்சுடர்கள், திருவாச்சியில் 52 சிம்மங்களையும்,56 பூதகணங்களையும்,102 தாமரை மலர்களையும்,2 மகர பறவைகளையும், 34 நாகங்களின் உருவங்களையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.
இந்த சிலையானது சுமார் 4 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட நிலையில், திம்மங்குடியில் பன்னிரு திருமுறையை ஓதுவார்கள் பாடலை பாடி, சிவகான பூதணநாதர் கைலை வாத்தியங்கள் முழங்க, நடராஜருக்கு அபிஷேகம், தீபாதரனை காண்பிக்கப்பட்டது. இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தார்.
மேலும் செய்திகளுக்கு..ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்.. பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு ! - பரபரப்பு
பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘நடராஜர் இயங்கி கொண்டிருப்பதால் தான் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. சிதம்பத்தில் நடராஜர் உலகத்தின் மத்திய புள்ளியில் இயங்கி கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். நம்மை படைத்த இறைவனை, நம்மாளும் படைக்க முடியும், இந்த சகோதரர்கள் நிரூப்பித்துள்ளார்கள்.
சிவன் மீது எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. பெண்கள் 10 மாதம் சுமந்தால், ஒரு குழந்தை, இவர்கள்10 வருடம் சுமந்து ஒரு குழந்தையை வடிவமைத்துள்ளனர்கரோனாவுக்காக தடுப்பூசிகள், கண்டுபிடித்து, வெற்றி கொண்டுள்ளோம் என்றால், இறைவன் அருளால் தான்’ என்று பேசினார்.
மேலும் செய்திகளுக்கு..“120 கோடியில் திருமணம்..ஜெயலலிதா போல ஜெயிலுக்கு போவார் அமைச்சர் மூர்த்தி - திகில் கிளப்பும் சவுக்கு சங்கர் !”