உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 - சென்னையில் நடைபெறவுள்ள மாநாட்டின் Logoவை வெளியிட்ட முதல்வர்!
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள், இன்று ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024காண அறிமுக விழாவில் அந்த மாநாட்டின் லோகோவை (Logo) வெளியிட்டு பேசினார்.
மாநாட்டின் லோகோவை வெளியிட்டு பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாம் நடத்த இருக்கின்ற மாபெரும் உலக முதலீட்டாளர் மாநாட்டின் பிரம்மாண்டத்தை முன்கூட்டியே வெளிப்படுத்தக்கூடிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது என்று கூறினார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் ஜனவரி மாதம் 2024ம் ஆண்டு ஏழு மற்றும் எட்டாம் தேதியில் சென்னையில் நடத்தப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாகவும் கூறினார்.
இந்த சிறப்பான முன்னேடுப்பை செய்துள்ள தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைப்புக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறினார்.
உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு பெரு நிகழ்வுக்கான இலச்சியினை (Logo) உலகுக்கு அறிமுகப்படுத்தவும், முன்னோட்ட அறிமுக விழாவை நடத்தும், நாம் இங்கே கூடியுள்ளோம் என்றர் அவர். மேலும் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த போதுதான் தமிழ்நாட்டினுடைய தொழில்துறை மாபெரும் புரட்சியை அடைந்தது, பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேடியும் நாடியும் வந்தது என்று கூறினார்.
இன்றைய தினம் சென்னையை சுற்றி காஞ்சிபுரம், சோழிங்கநல்லூர், ஒரகடம், திருப்பெரும்புதூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றால் பார்க்கக்கூடிய பல தொழிற்சாலைகள் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை தான், அப்போது தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை அடைந்தது, இது தொடர்பாக ஆங்கில வர்த்தக நாளிதழ்கள் முதலமைச்சர் கலைஞரை பாராட்டி எழுதினார்கள் என்றும் மு.க ஸ்டாலின் கூறினார்
முதலீடுகள் என்பது சாதாரணமாக வந்துவிடாது, ஒரு ஆட்சி மீது நல்லெண்ணம் இருக்க வேண்டும், ஆட்சியாளர்களின் மீது மரியாதை இருக்க வேண்டும், அந்த மாநிலத்தின் உள் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும், சட்டம் ஒழுங்கு முறையாக இருக்க வேண்டும். இவ்வளவும் இருந்தால் தான் முதலீடுகள் செய்ய முன் வருவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
பண்ருட்டியில் நிலம் அளப்பதில் தகராறு; நில அளவையரை செருப்பால் அடித்து விரட்டிய மக்கள்