பண்ருட்டியில் நிலம் அளப்பதில் தகராறு; நில அளவையரை செருப்பால் அடித்து விரட்டிய மக்கள்
பண்ருட்டி அருகே நிலம் அளக்கும் போது பிரச்சனை ஏற்பட்டு நில அளவலரை செருப்பால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் சீதாபதி (வயது 60). முன்னாள் அதிமுக கவுன்சிலர். இவரது தந்தை சந்திரசேகர். இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு இவரது தந்தை அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரையிடம் நான்கு வெற்று பாண்டு பேப்பரில் கையெழுத்து போட்டு ரூ.27 ஆயிரத்திற்கு கடனாக முந்திரிக்கொட்டை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் சின்னத்துரையின் மகள் ராஜகுமாரி என்பவர் அதே ஆண்டு 1983ல் வெற்று பத்திரத்தில் ரூ.90 ஆயிரம் தர வேண்டும் என்று எழுதி கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ராஜகுமாரிக்கு சாதகமாக கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையெடுத்து சந்திரசேகர் என்பவர் தொடுத்த வழக்கு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தமிழகத்தில் விவசாயிகள் எலியை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் - அய்யாகண்ணு வேதனை
சென்னை உயர்நீதிமன்றம் ராஜகுமாரிக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அதன்பிறகு சந்திரசேகர் மகனான சீதாபதி என்பவர் கடந்த ஆண்டு 2006ல் பாகப்பிரிவினை வழக்கில் பிரச்சனை உள்ள 8 ஏக்கர் நிலத்தின் சர்வே நம்பர் சேர்க்கப்பட்டு கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2007 யில் இந்த இடத்தை யாரும் விற்கக் கூடாது என்று கடலூர் நீதிமன்றம் ஸ்டே விதிக்கப்பட்டது.
வழக்கு நிலுவையில் இருக்கும் போது சின்னத்துரை மகளான ராஜகுமாரி சகோதரர்களான மணிகண்டன், நீலகண்டன் ஆகிய இருவர்களுக்கு கடந்த மார்ச் 2021 இல் தானே செட்டில்மன்ட் செய்துள்ளார். இதை எதிர்த்து சீதாபதி என்பவர் பத்திரத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடலூர் பத்திரப்பதிவுத்துறை மாவட்ட பதிவாளருக்கு விசாரணை நடத்த கோரி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயிலர் படத்துக்கு ரஜினி ஹீரோ, எங்களுக்கு எடப்பாடி தான் ஹீரோ - செல்லூர் ராஜூ நெகிழ்ச்சி
இந்நிலையில், சர்ச்சைக்குரிய நிலத்தை அளக்க வந்த நில அளவையருக்கு எதிராக குடும்ப உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே நில அளவையர் செருப்பால் தாக்கப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.