நாமக்கல்

கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த கூலித் தொழிலாளிக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் நீதிமன்ற நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தீர்ப்புக்கு பிறகு குற்றவாளியை கோவை சிறையில் அடைத்தனர்.

namakkal name க்கான பட முடிவு

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், ஆர்.புதுப்பட்டியில் உள்ளது நிங்கணாங்காடு. இந்தப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பூபதி (27).  இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ஆம் தேதி மூலப்பள்ளிப்பட்டியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்துவிட்டார்.

மாணவியின் பெற்றொர் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில், தங்களது மகளை ஆசை வார்த்தைக் காட்டி கடத்திச் சென்று கற்பழித்துவிட்டார்" என்று பூபதி மீது புகார் கொடுத்தனர்.

rape க்கான பட முடிவு

அந்தப் புகாரின் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி பூபதியை கைது செய்தனர். அதன்பின்னர் அவரை நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். கடந்த இரண்டு வருடங்களாக பூபதி மீது போடப்பட்ட வழக்கு விசாரணை நடந்துவந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கு முழுவதுமாக முடிந்து நேற்று மகளிர் நீதிமன்ற நீதிபதி இளங்கோ நேற்று தீர்ப்பளித்தார். அதில், "குற்றம் சாட்டப்பட்ட பூபதி குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், அவருக்கு ரூ.4000 அபராதம் விதிக்கப்படுகிறது" என்று நீதிபதி உத்தரவிட்டார். 

jail க்கான பட முடிவு

இதனையடுத்து காவலாளர்கள் பூபதியை கோயம்புத்தூர் சிறைக்கு அழைத்துச் சென்று அவரை சிறையில் அடைத்தனர்.