women siege assembly sepaker dhanabal
அவிநாசியில் காலிக் குடங்களுடன் தமிழக சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை சரியாக பெய்யாமல் முக்கிய ஏரிகள், குளங்கள் வறண்டு காணப்படுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
நெடுந்தூரம்ப சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பெண்கள் தண்ணீர் கிடைக்காதாதால். அந்த பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் தமிழக சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் மத்தியில் சிக்கிய அவர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுள்ளார். இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து சபாநாயகர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கடந்த சில மாதங்களாக தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருவதாகவும், தண்ணீரில்குடிநீரில் புழு கலந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.
சபாநாயகர் முற்றுகையிடப்பட்டதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆட்சியர் சரவணன். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் இதனால் அங்கு போராட்டம் கைவிடப்பட்டது.
