Asianet News TamilAsianet News Tamil

ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை நடந்தது எப்படி.? மகளிர் ஆணையம் நேரில் விசாரணை- விரைவில் அறிக்கை தாக்கல்

அன்பு ஜோதி ஆசிரமத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்திய நிலையில், விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார். 

Women Commission in person inquiry regarding sexual assault in Anbu Jyoti Ashram
Author
First Published Feb 20, 2023, 11:35 AM IST

அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தல் ஜவஹிருல்லா என்பவர் காணமல் போன நிலையில் அவரை மீட்டு தரும்படி அவரது உறவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அரசு அதிகாரிகள் ஆசிரமத்தில் நடத்திய சோதனையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்த ஆசிரமத்தில் இருந்து 20க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போன நிலையில், பெண்களுக்கு பாலியல் தொல்லையும், மன நிலை பாதிக்கப்பட்டவர்களை குரங்குளை ஏவி விட்டு கடிக்க விட்ட கொடூரமும் அரங்கேறியுள்ளத்து தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்.

கே.பி. முனுசாமி ரூ.1 கோடி கேட்டது உண்மைதான்.. ஆனால்.. சீனாக சீனுக்கு வரும் ராஜேந்திர பாலாஜி..!

Women Commission in person inquiry regarding sexual assault in Anbu Jyoti Ashram

மகளிர் ஆணையம் நேரில் விசாரணை

இந்தநிலையில் ஆசிரமத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்களிடம் மாநில மகளிர் ஆணையத்தலைவர் ஏ.எஸ்.குமாரி  நேரில் விசாரணை நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்டவர்களிடம் ஆசிரமத்தில் நடைபெற்ற சம்பவங்களை கேட்டறிந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  நல்ல நிலையில் உள்ளவர்கள், மாவட்டத்தில் செயல்படும் மற்ற இல்லங்களில் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Women Commission in person inquiry regarding sexual assault in Anbu Jyoti Ashram

விரைவில் அறிக்கை தாக்கல்

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 38 ஆண்கள், 16 பெண்கள் என மொத்தம் 54 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்தார். ஆசிரமத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட 2 பெண்களும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கூடுதலாக அரசு மனநல காப்பகங்களை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும், தற்போதைய ஆய்வு அறிக்கை சிபிசிஐடி விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்.  இதுவரை ஆசிரம உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் ஆணையம் மூலம்விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை தமிழக அரசிடமும் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என  ஏ.எஸ்.குமாரி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் நமது கொடி பறக்க வேண்டும்; தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள்

Follow Us:
Download App:
  • android
  • ios