Asianet News TamilAsianet News Tamil

முதுமலையில் புலி தாக்கியதில் பெண் பலி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி தாக்கதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

woman attacked by tiger and died in mudumalai forest area
Author
First Published Feb 1, 2023, 3:59 PM IST

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கூடலூர் தொரப்பள்ளி முதல் மைசூர் சாலையில் பந்திப்பூர் வரையிலும், ஊட்டியில் இருந்து செல்லும்போது மசனகுடி வரையிலும் புலிகள் காப்பக காடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில் முதுமலை தெப்பக்காடு பகுதியில் வசிக்கும் மாரி (வயது 50) என்ற பெண்மணி நேற்று முதல் காணவில்லை. இதனைத் தொடர்ந்து அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

நாகையில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து; தாய் மகன் பலி

இன்று காலையும் அப்பெண்ணை தேடும் பணி தொடர்ந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை தெப்பக்காடு பகுதியில் மாரி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதாக ஊர்மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது; 40 சவரன் மீட்பு

புலி தாக்கியதில் மாரியின் மார்பு மற்றும் கை, கால் பகுதிகளில் காயங்களுடன் உடலை மீட்டனர் பின்பு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மாதம் புலி தாக்கியதில் வாலிபர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பெண் புலி தாக்கியதில் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios