தமிழகத்தை நோக்கி வருகிறதா பேராபத்து? வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும்? பகீர் கிளப்பும் டெல்டா வெதர்மேன்!

Delta Weatherman: வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் டிசம்பர் 17 முதல் 20 வரை 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். டிசம்பர் 14, 15, 16 ஆகிய தேதிகளில் வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை இடைவேளை இருக்கும். 

Will there be heavy rain in the coming days! Delta Weatherman shocking information tvk

வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழக மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது. பல்வேறு மாவட்டங்களில் மழை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

அதாவது தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும்  என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் ஐந்தாம் சுற்று மழைப்பொழிவு  எப்படி இருக்கும், மழையின் தாக்கல் எப்படி இருக்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்களை டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: Heavy Rain: தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்து! இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! வானிலை மையம் அலர்ட்!

இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறுகையில்: அந்தமானை  ஒட்டிய கடல்பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இந்த காற்று சுழற்சி அடுத்த 24 மணிநேரத்தில் தென் கிழக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்குமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறி மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து குறிப்பாக தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு டிசம்பர் 16ஆம் தேதி வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் 5ம் சுற்று வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து மழையை கொடுக்க இருக்கிறது.

குறிப்பாக டிசம்பர் 14ஆம் தேதி அதாவது இன்று காலை 10 மணி முதலே வட மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மழையின் தாக்கம் குறைந்து இருக்கிறது. இந்த வட மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரையில் டிசம்பர் 14 ,15,16 ஆகிய மூன்று நாட்கள் மழை இடைவேளி நாட்களாக இருக்கும். இந்த இடைவெளி நாட்களை பயன்படுத்தி விவசாயிகள் தேவையான வேளாண்மை பணிகளை மேற்கொள்ளலாம்.

இதையும் படிங்க: EVKS Elangovan: கடந்த ஆண்டு மகன்! இந்த ஆண்டு தந்தை! காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி!

அதேபோன்று தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று இரவு வரை மழை நீடித்தாலும் டிசம்பர் 15, 16 ,17 ஆகிய மூன்று நாட்கள் தென் மாவட்டங்களில் இடைவெளி நாட்களாக அமையும். அதன் பிறகு டிசம்பர் 17ஆம் தேதி காலை முதல் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக வட கடலோரம்,  டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கி டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் படிப்படியாக தீவிரம் அடையும். பரவலாக கனமழையை,  ஒரு சில இடங்களில் மிக கனமழையும் எதிர்பார்க்கலாம். இது தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இது புயலாக மாறுமா என்பது குறித்து ஓரிரு நாட்களில் உறுதிப்படுத்தலாம். இது தாழ்வு மண்டலமோ அல்லது புயலோ எதுவாக இருந்தாலும் இதுவும் ஒரு மழைப்பொழிவை தரக்கூடிய சமயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios