will provide security for employees - Tasmac staffs
கரூர்
சாராயக் கடைக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிப்பதால் டாஸ்மாக் சாராயக் கடை ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு அரசு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கரூர் மாவட்ட பேருந்து நிலைய ரவுண்டானா அருகே ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சிறப்புத் தலைவர் கா.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் பெ.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
“நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகளை மூட வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டதையடுத்து, அரசின் கொள்கையின் அடிப்படையிலும் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 120 கடைகளில் தற்போது 65 கடைகள் மூடப்பட்டன.
அதில், பணிபுரிந்து வந்த ஊழியர்கள் தற்போது வேலையின்றி தவிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கிட வேண்டும்.
மேலும் அரசு சாராயக் கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், தரைக்கடை வியாபாரிகள் சங்க செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
