Asianet News TamilAsianet News Tamil

பெற்றோர் கேட்ட கேள்வி.. கடுப்பான ஆளுநர்.. நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநர் ஆர்.என் ரவி தடாலடி பதில் !!

நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார்.

Will never sign NEET exemption bill: Tamil Nadu Governor RN Ravi's plan
Author
First Published Aug 12, 2023, 3:17 PM IST

நீட் தேர்வில் 2023-ம் ஆண்டில் நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்துரையாடினார். அப்போது சேலத்தைச் சேர்ந்த மாணவரின் தந்தை ஒருவர்,  தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர். 

நிறைய மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இருப்பினும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே, தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

Will never sign NEET exemption bill: Tamil Nadu Governor RN Ravi's plan

அதற்கு பதில் அளித்த தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, பள்ளியில் படிக்கும்போதே, ஆழமாக கவனித்துப் படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம். ஒவ்வொரு முறையும், நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது மாணவர்களின் கற்றல் திறனையே கேள்விக்குறியாக்கிவிடும். அதேபோல், நீட் தேர்வு குழுவின் அறிக்கையின்படி, நீட் தேர்வு நடைமுறைக்கு வரும் முன்பு மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருந்தது.

Will never sign NEET exemption bill: Tamil Nadu Governor RN Ravi's plan

நூற்றுக்கும் குறைவான மாணவர்களே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பை படித்துள்ளனர். ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின்புதான், அதிகளவில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற்றுள்ளனர் என்று பதிலளித்தார். தமிழக ஆளுநர் ஆர். என். ரவியின் இந்த பதில் தமிழக அரசியல் வட்டாரங்களில் மீண்டும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

Follow Us:
Download App:
  • android
  • ios