தமிழகத்தில் மழை நிலவரம் என்ன.? இந்த மாதம் மழை பெய்யுமா.? பெய்யாதா.? வெதர்மேன் கூறிய லேட்டஸ்ட் அப்டேட்
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் சென்னையில் குறைவான அளவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் மழை பெய்யுமா.?
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு நேரங்களில் இடி, மின்னலோடு மழை கொட்டி தீர்த்தது. இந்தநிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமார், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் வெதர் மேன் x தள பதிவில், நேற்று இரவு பெய்த மழை நிலவரம் தொடர்பாக கூறுகையில், வேலூரில் மீண்டும் காற்றுகள் உருவாகின்றன. திசைமாற்றி காற்று நன்றாக இருக்கிறது, இரவுக்குப் பிறகு சென்னைக்கு நகரலாம் என தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாத மழை நிலவரம்
குமரி, நெல்லை மற்றும் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அணைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களில் அக்டோபர் மாதத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் வட மாவடங்களில் அக்டோபர் மாதம் குறைவாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். கர்நாடகா மக்களில் சிலர் சென்னை மழையை ட்வீட் செய்து, தமிழகத்தில் அதிக மழை பெய்து வருவதாகவும், அவர்களுக்கு காவிரி நீர் தேவையில்லை என்றும் கூறுவதாக தெரிவித்துள்ளார்,
ஆனால் சென்னை மற்றும் வடமாவட்டங்களில் மட்டுமே அதிக மழை பெய்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காவிரியில் குறைவான மழையே பெய்துள்ளது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 டிஎம்சி, இதில் 5 டிஎம்சி டெட் ஸ்டோரேஜ் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அக்டோபரில் நல்ல மழை பெய்தாலும் காவிரி நீர்ப்பிடிப்பு பெரும் பற்றாக்குறையில் முடிவடையும் எனவும் வெதர் மேன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்