குன்னூர் பேருந்து விபத்து.. 8 பேர் பலியான சோகம்.. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு - டிஐஜி சரணவசுந்தர் தகவல்!

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து பேருந்து ஓட்டுநர் உட்பட 55 பேர் உதகைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு உள்ள சுற்றுலா ஸ்தலங்களை கண்டுகளித்து விட்டு, மீண்டும் தென்காசி திரும்பும் போது, குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே உள்ள மரப்பாலம் பகுதியில் அந்த சுற்றுலா பேருந்து ஒரு 50 அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Coonoor Tourist Bus Accident Death toll may increase DIG Saranava Sundar Report ans

உடனே இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. செய்தி அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு அருகில் உள்ள குன்னூர் மற்றும் கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை,கோவை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள், ஒரு சிறுவர் என எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கவலை வேண்டாம்.. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு நீட்டிப்பு.. எப்போதுவரை தெரியுமா? முழு தகவல்!

உயிரிழந்தவர்கள் விபரம் பின்வருமாறு..

1. நிதின் (வயது15)
2. தேவிகா (வயது 36)
3. முருகேசன் (வயது 65)
4. முப்பிடாத்தி (வயது 67)
5. கவுசல்யா (வயது 25)
6. இளங்கோ (வயது 67)
7. ஜெயா (வயது 50)
8. தங்கம் (வயது 40)

இந்த கொடூர விபத்தை அடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் அவர்கள் சுற்றுலா பேருந்து விபத்து ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து, இறந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், அதிக காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனக கூறினார்.

இந்நிலையில் விபத்தை நேரில் ஆய்வு செய்து வரும் கோவை சரக கோவை சரக டிஐஜி சரணவசுந்தர், வெளியிட்ட தகவலில், ஏற்கனவே இந்த கோர விபத்தில் 8 பேர் பலியாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மீட்கப்பட்ட 40 பேரின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios