Asianet News TamilAsianet News Tamil

TN Rains : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இந்த மாவட்டங்கள் எல்லாம் உஷார்..முக்கிய அறிவிப்பு இதோ.!

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

 

Widespread rains are likely in Tamil Nadu due to the prevailing atmospheric circulation in southern Tamil Nadu
Author
Tamilnadu, First Published Dec 4, 2021, 7:19 AM IST

இன்று (டிசம்பர் 4) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் .

Widespread rains are likely in Tamil Nadu due to the prevailing atmospheric circulation in southern Tamil Nadu

நாளை (டிசம்பர் 5 ) சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 6ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். டிசம்பர் 7ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகாலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.

Widespread rains are likely in Tamil Nadu due to the prevailing atmospheric circulation in southern Tamil Nadu

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி,சேரன்மகாதேவி,திருநெல்வேலி,ஸ்ரீவில்லிபுத்தூர்,கன்னியாகுமரி ,சிவகிரி,தேனி, சூரளக்கோடு ஆகிய பகுதிகளில் அதிகபட்ச மழை பதிவாகி இருக்கிறது. ஜாவத் என்ற புயல்  வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடலோர பகுதியை இன்று காலை நெருங்குகிறது. அதனை தொடர்ந்து வடக்கு - வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரும்.

Widespread rains are likely in Tamil Nadu due to the prevailing atmospheric circulation in southern Tamil Nadu

இதனால், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios