Widespread rain from morning to night The nature of the people lives ... where?

கிருஷ்ணகிரி 

கிருஷ்ணகிரியில் காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான பெங்களூரு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 643 கன அடியாக இருந்தது. இது மேலும் அதிகரித்து விநாடிக்கு 832 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 753 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 41.65 அடியாக இருந்தது.

அதேபோன்று, ஒசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்து வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒசூரில் கடந்த சில நாள்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.

கிருஷ்ணகிரியில் பெய்த மழை அளவு (மி.மீ.):

ஒசூர் - 47, தேன்கனிக்கோட்டை - 40, தளி - 40, அஞ்செட்டி - 30.4, சூளகிரி - 23, பாரூர் - 16.6, பெனுகொண்டாபுரம் - 16.2, நெடுங்கல் - 16.2, கிருஷ்ணகிரி - 15.4, போச்சம்பள்ளி - 14.2, ராயக்கோட்டை - 11, ஊத்தங்கரை - 5.