Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி மௌன குருவாக இருப்பது ஏன்?: முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

கொரோனாவை ஒழிக்க விளக்கு ஏற்றி, மணி அடிக்கச் சொல்லி விஞ்ஞானி போன்று மோடி பேசிய மோடி வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி மௌனகுருவாக இருப்பது ஏன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Why PM Modi is acting as a silent guru? MK Stalin questions sgb
Author
First Published Apr 15, 2024, 8:39 PM IST

கொரோனாவை ஒழிக்க விளக்கு ஏற்றி, மணி அடிக்கச் சொல்லி விஞ்ஞானி போன்று மோடி பேசிய மோடி வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி மௌனகுருவாக இருப்பது ஏன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையைப் பற்றிப் பேசிய முதல்வர், தெற்கில் இருந்து நமது குரல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒலித்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்க ஆலோசனை நடைபெற்ற, மண்ணடி, பவளக்காரத் தெரு, கொட்டும் மழையில் திமுக தொடங்கப்பட்ட ராபிசன் பூங்கா, கழகத்தின் இதயம் அறிவகம் என வட சென்னைக்கும், திமுகவுக்குமான உறவு தாய்க்கும், சேய்க்குமான உறவு!

இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா இல்லை சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா? புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா? இல்லை RSS-ன் சட்டம் இருக்க வேண்டுமா? இடஒதுக்கீடு இருக்கணுமா இல்லை வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது.

ஊழலை ஒழிக்க வந்த அவதார புருசர் போல, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். பொருளாதார புலி போல GST-ஐ கொண்டுவந்தார். பெரிய சயின்டிஸ்ட் மாதிரி கொரோனா காலத்தில் மணி அடிக்க சொன்னார். இதனால் எவ்வளவு இழப்பு? அதனால்தான் நாம் தொடர்ந்து சொல்கிறோம்... மோடியும், பாஜகவும் நாட்டுக்கும் கேடு, வீட்டுக்கும் கேடு!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஹீரோ. பாஜக தேர்தல் அறிக்கை வில்லன். ஏனென்றால் பாஜக தேர்தல் அறிக்கையில், மத அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதாக அறிவித்திருக்கிறார்கள். நாட்டிற்கு வரும் மிகப்பெரிய ஆபத்தின் டிரைலர் தான் இந்த பொது சிவில் சட்டம். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் நாடு மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும்!

2019 தேர்தல் அறிக்கையில் 1 ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என்ற அதே அறிவிப்பை மீண்டும் Copy Paste செய்திருக்காங்க. ஆனால் உண்மையில், சானிட்டரி நாப்கினுக்கு GST வரியை விதித்தது பாஜக அரசு. அந்த வரியை நீக்க போராடியது தி.மு.க.

தோல்வி பயத்தில் மற்றவர்கள் உண்ணும் உணவை மோடி விமர்சிக்கிறார். உணவு என்பது தனிமனிதனின் விருப்பம். யாருடைய உணவு உரிமைகளிலும் தலையிட மோடிக்கு எந்த உரிமையும் இல்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக மலிவான அரசியல் செய்யும் ஒரு பிரதமரை இந்திய வரலாறு இதுவரை கண்டதில்லை.

பத்தாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ₹ 10 லட்சம் கோடி கொடுத்திருப்பதாக பச்சைப் பொய் சொல்கிறது பா.ஜ.க அரசு! நம்மிடம் 1 ரூபாய் வரியாக வாங்கினால், வெறும் 29 பைசா மட்டுமே திருப்பி தந்துவிட்டு நேற்று ஒரு கணக்கு காட்டியிருக்கிறார்கள் எல்லாம் பொய்கணக்கு! எத்தனை பொய்களைத்தான் எங்கள் காதுகள் தாங்கும். எங்கள் காதுகள் பாவமில்லையா?

மத அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதாக பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறது. நாட்டிற்கு வரும் மிகப்பெரிய ஆபத்தின் டிரைலர் தான் இந்த பொது சிவில் சட்டம்!

இந்திய துணைக் கண்டத்தில் இதுவரை 16 பேர் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் செய்யாததை மோடி செய்திருக்கிறார். ED, IT, CBI வைத்து மிரட்டி, கட்சியை உடைத்து எம்.எம்.ஏ, எம்.பி.க்களை வாங்குவது, முதலமைச்சர்களை கைது செய்வது, தொழில்முனைவோர்களை மிரட்டி பணம் பெறுவது என மிரட்டியே நிதியை குவித்த ஒரே வசூல்ராஜா மோடி மட்டும்தான்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios