Asianet News TamilAsianet News Tamil

விஜய்யின் கட்சி கொடியில் யானை இடம்பெற்றது ஏன்.? இது தான் காரணமா.?

தமிழக அரசியலில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள நடிகர் விஜய், தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். அடர்சிவப்பு, மஞ்சள் நிற பின்னணியில் 2 போர் யானைகள் மற்றும் வாகை மலர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த சின்னங்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை கவரும் நோக்கம் கொண்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Why is the elephant symbol on the flag of actor Vijay's party KAK
Author
First Published Aug 22, 2024, 2:38 PM IST | Last Updated Aug 22, 2024, 2:39 PM IST

அரசியல் களத்தில் நடிகர்கள்

தமிழகத்தில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக திமுக- அதிமுக இந்த இரண்டு கட்சிகள் மட்டும் தான் ஆட்சி அமைத்து வருகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கு போட்டியாக தொடங்கப்பட்ட கட்சிகள் ஒரு சில தேர்தலுக்கு பிறகு தாங்கள் யாரை எதிர்க்க களம் இறங்கினோமா அந்த கட்சியோடே கூட்டணி அமைத்து விடுவார்கள். அதே போலத்தான்  திமுக மற்றும் அதிமுகவிற்கு போட்டியாக தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கினார். முதல் இரண்டு தேர்தலிகளில் கடவுளோடு மட்டுமே கூட்டணி  என அறிவித்த விஜயகாந்த் 2011ஆம் ஆண்டு அதிமுகவோடு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார்.

அடுத்த, அடுத்த வருடங்களில் திமுகவோடு கூட்டணி அமைக்கவும் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இதனையடுத்து திராவிட கட்சிகளுக்கு போட்டியாக களம் இறங்கியவர் தான் கமல்ஹாசன், அவரும் இரண்டு சட்டமன்ற தேர்தலை தனித்து எதிர்கொண்டவர் தற்போது திமுகவோடு கூட்டணி அமைத்து விட்டு அமைதியாகிவிட்டார். இதே போல திரைத்துறையில் இருந்து வந்த சரத்குமார், கார்த்திக் ஆகியோர் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளனர். 

Why is the elephant symbol on the flag of actor Vijay's party KAK

திரைத்துறையில் நம்பர் ஒன்

ஆனால் திரைத்துறையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய நிலையில், தனக்கு பணம் முக்கியமில்லை நாடு தான் முக்கியம் என்ற கண்ணோட்டத்தில் அரசியலில் களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்து களம் இறங்கிவர், முதல் க்கட்டமாக தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்தார். விரைவில் மாநாடு முதல் மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடத்த திட்டம் போட்டும் வரும் நிலையில் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இன்று காலை நடிகர் விஜய் வெளியிட்டுள்ள கொடியில் அடர்சிவப்பு, மஞ்சள் நிற பின்னணியில் 2 போர் யானைகள் வாகை மலர் ஆகியவை அக்கட்சி கொடியில் இடம்பெற்றுள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றியை கொண்டாடியதாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளது. இதனை குறிக்கும் வகையில் தான் வாகை பூ இடம்பெற்றதாக கூறப்படுகிறது

Why is the elephant symbol on the flag of actor Vijay's party KAK

யானை சின்னம் ஏன்.?

அதே போல யானை சின்னம் இடம்பெற்றதற்கான காரணமும் பலவகையில் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக போர்ப்படையில் முதன்மையானது யானையாகும், அந்தவகையில் யானை படம் வெற்றியின் அடையாளமாக இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி பகுஜன் சமாஜ் கட்சி இந்த கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்தநிலையில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை கவர்வதற்காக வைக்கப்பட்டதாகவும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios