திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான சத்தியவாணி முத்துவுக்கு இன்று100வது பிறந்தநாள்,  நாட்டையே உலுக்கிய கீழ்வெண்மணி படுகொலைக்கு பின்னர் அப்பகுதியில் அமைதி திரும்பும் நடவடிக்கையிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மறுவாழ்வு ஏற்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்தியவர் தான் சத்தியவாணி முத்து. 

யார் இந்த சத்யவாணி முத்து ?

1923ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையின் பிறந்தார் சத்தியவாணி முத்து. எழும்பூர் அரசு உயர்நிலைப்பள்ளில் 10 ஆம் வகுப்பு வரை படித்தார். அதன்பின் ஹோமியோபதி மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து மருத்துவரானார். தனது சிறு வயது முதல் நீதிகட்சி மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் தொடர்பான இயக்கங்களில் ஈடுபாடுகொண்டிருந்தார். சத்தியவாணி முத்து தனது 19வது வயதில் எம்.எஸ்.முத்து என்பவரை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணா தொடங்கிய போது அக்கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர் சத்தியவாணி முத்து. 1953 ஆண்டு குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக திமுகவினர் கடுமையாக தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். 

பதுங்கி இருந்து பாயப்போகும் ஓபிஎஸ்.? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு..! காரணம் என்ன.?

அமைச்சரவையில் சத்யவாணி முத்து

திமுகவின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி வீட்டு முன்பாக நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சத்தியவாணி முத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் முதல்வரின் வீட்டிற்குள் நுழைந்து தரையில் படுத்து போராட்டத்தை தொடர்ந்தார். 1965ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் நிறை மாத கர்பிணியாக சிறை சென்று சிறையிலேயே குழந்தை பெற்றார் சத்யவாணி.

பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சி.பி.ராதாகிருஷ்ணன் விலகல்.. என்ன காரணம் தெரியுமா?

இரண்டு முறை தேர்தலில் தோல்வியை தழுவிய சத்யவாணி முத்து 1967ஆம் ஆண்டு மீண்டும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அண்ணாவின் அமைச்சரவையில் சமூகநலம், மீன்வளம், செய்தித்துறை, ஆதிதிராவிடர் நலன் உள்ளிட்ட துறைகளை கவனித்தார். இந்தியாவில் அம்பேத்கார் பெயரில் முதல் முதலில் கல்லூரி தொடங்கப்பட்டது தமிழகத்தில் தான். அதுவும் அமைச்சராக சத்தியவாணிமுத்து அமைச்சராக இருந்தபோது, அரசிடம் கோரிக்கை வைத்து பெற்று அதனை தனது பெரம்பலூர் பகுதியில் திறந்தார்.

முதல் மத்திய அமைச்சர்

அண்ணாவின் மறைவுக்கு பிறகு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக திமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். இதனையடுத்து அதிமுகவுடன் தனது கட்சியான தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகத்தை இணைத்தார். இதனை தொடர்ந்து சத்தியவாணியை 1978ல் மாநிலங்களை உறுப்பினராக்கி டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்தார் சத்தியவாணிமுத்து. காங்கிரஸ் அல்லாத ஒருவர் தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சரானது இதுதான் முதல் முறை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சத்யவாணி முத்து 1999ஆம் ஆண்டு காலாமானார். இந்தநிலையில் நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடும் சத்யவாணியின் முத்துவின் நினைவுகளை அரசியல் கட்சி தலைவர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

பிபிசி அலுவலகத்தில் ரெய்டு..! வருமான வரித்துறையை ஏவி விட்டு பழிவாங்க முற்படுவதா- சீமான் ஆவேசம்