which leaf will protect the tamilnadu ? whether papaya leaf or two leaf?

தமிழகத்தை காப்பாற்ற போவது இரட்டை இலையா? பப்பாளி இலையா?

இரட்டை இலையா?

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது ஒன்று சசிகலா அணி மற்றும் பன்னீர் அணி.

இதனிடையே காலியாக இருந்த ஜெயலலிதா தொகுதியான ஆர்கே நகர் தொகுதியில் இடைதேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த இரண்டு அணிகளுமே ஒரே கட்சியின் சார்பாக அதாவது இரட்டை சிலை சின்னத்தில் தான் போட்டி இடுவோம் என சசிகலா அணி சார்பிலும், பன்னீர் அணி சார்பிலும் போட்டி போட்டுக்கொண்டு போராடினர்.

அதிமுகவில் உள்ள சசிகலா, ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணிகளும் உரிமை கோருவதால்,ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.அதேபோல், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை இரட்டை இலை சின்னம் யாருக்கு என முடிவாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி இலையா ?

தமிழகம் என்றாலே அரசியலுக்கு மட்டுமில்லாமல்,டெங்குவிற்கும் பரபரப்பாக காணப்படும் ஒரு மாநிலமாக மாறி உள்ளது

இந்நிலையில் தமிழகத்தை ஒரு ஆட்டுஆட்டுவித்து வரும்,டெங்குவிற்கு சிறந்த மருந்தாக நிலவேம்பு கசாயமும், அதற்கு அடுத்தபடியாக பப்பாளி இலை சாறும் கொடுத்து வருகின்றனர்.

டெங்குவிற்கு சிறந்த நிவாரணியாக பப்பாளி இலை சாறு கொடுக்கப்பட்டு வருகிறது

இரட்டை இலையா? பப்பாளி இலையா?

தமிழகத்தில் சவாலாக விளங்கி வரும் டெங்குவை காப்பாற்ற போவது பப்பாளி இலையா ? அல்லது தமிழக மக்களுக்காக முழு நேர சேவையில் இறங்கி இரட்டை இலை யாருக்கு என ஒரு முடிவு செய்த பின்னராவது, மக்களின் பல பிரச்சனைக்கும், குறிப்பாக டெங்கு பிரச்சனைக்கும் தீர்வு காணுமா இரட்டை இலை என மக்கள் கருதுகின்றனர்.

இதன் மூலம் தமிழகத்தை காப்பாற்ற போவது இரட்டை இலையா அல்லது பப்பாளி இலையா என மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.