கோடை விடுமுறை முடித்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்தான அறிவிப்பை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிவிக்கிறார்.
முன்னதாக கோடைவிடுமுறைக்கு பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகள் திறக்கபடும் என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
ஆசியர்களுக்கு பயிற்சி, பள்ளிகளின் உள்கட்டமைப்பு சீரமைத்தல், காலை சிற்றுண்டி திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் பள்ளிகள் திறப்பு தாமதமாகும் என்று சொல்லப்பட்டது.
கடந்த முறை கொரோனா இரண்டாம் அலையில் தாக்கத்தினால் செப்டம்பர் மாதம் தான் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்றன. அதன் பின்னர், மூன்றாம் அலையில் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பிப்ரவரி மாதம் அனைத்து பள்ளிகளுக்கு திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றனர்.
மேலும் படிக்க: நகராட்சி கூட்டத்தை கட் அடித்து விட்டு நெஞ்சுக்கு நீதி படத்திற்கு சென்ற தலைவர்.! அதிமுக கவுன்சிலர்கள் அதிர்ச்சி
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிளஸ்1 , பிளஸ்2 , 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்து முடிந்துள்ளது. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய பாடங்களுக்கு தேர்வு முடிந்துவிட்டன. இன்னும் சில பாடங்களுக்கான தேர்வு மட்டும் இந்த மாதம் இறுதியில் முடிகிறது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு மே மாதம் 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக ஜூன் மாத இறுதியில் பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான காலை சிற்றுண்டி திட்டம் சில மாவட்டங்களில் வரும் கல்வியாண்டியில் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கான முன்னேற்பாடுகளும் வேண்டியிப்பதால் பள்ளிகள் திறப்பு ஜூன் மாதம் 4 வது வாரத்தில் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே இன்று காலை 10 மணிக்கு பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிக்கவுள்ளார்.
மேலும் படிக்க: TN RTE Admission 2022-23 : முக்கிய செய்தி! தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை.. இன்றுடன் முடிவு.!
