TN RTE Admission 2022-23 : முக்கிய செய்தி! தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை.. இன்றுடன் முடிவு.!

TN RTE Admission Last date : சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும்சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறலாம். 

Free student admission to private schools RTE Admission Last date today

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக்குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள், 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி  முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.  rte.t schools.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள்  மே 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.  

Free student admission to private schools RTE Admission Last date today

மாநிலம் முழுவதும் 8ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன என தெரிவிக்கப்பட்டது. https://rte.tnschools.gov.in/ என்ற இணையதள முகவரியில் மாணவரின் புகைப்படம், சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் RTE கீழ் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.  விண்ணப்பிக்க தவறியவர்கள் http://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Free student admission to private schools RTE Admission Last date today

பள்ளிகளில்  இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்  மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கிவிட்டதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்தது. இந்நிலையில், தகுதியான விண்ணப்பங்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும்சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறலாம். இந்த திட்டத்தில், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்..? வெளியே கசிந்த தகவல்.! வேட்பாளர்கள் இவர்களா ?

இதையும் படிங்க : திமுகவுடன் கூட்டணி வச்சது பெரிய தப்பு..என்ன பண்றது.! புலம்பும் கே.எஸ் அழகிரி !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios