Asianet News TamilAsianet News Tamil

இன்று முழு ஊரடங்கு... என்னென்ன கட்டுப்பாடுகள்...? மக்கள் பின்பற்ற வேண்டியது இதுதான் !!

ஞாயிற்றுக்கிழமையான இன்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.இந்த ஊரடங்கு நேரத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்பதை பார்க்கலாம்.

what restrictions will be in force during this curfew tamilnadu which came into effect across the state today Sunday
Author
Tamilnadu, First Published Jan 9, 2022, 7:58 AM IST

தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

what restrictions will be in force during this curfew tamilnadu which came into effect across the state today Sunday

அதன்படி,ஞாயிற்றுக்கிழமையான  இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.மேலும்,இரவு நேர ஊரடங்கு இன்றும் அமலில் இருக்கும் என்பதால்,இன்று முதல் நாளை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு நேரத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என கீழே காண்போம்.அதன்படி அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள்,மருந்தகங்கள்,பால் விநியோகம்,ATM மையங்கள்,சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது. இன்று (9-1-2022) முழு ஊரடங்கின் போது,உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

what restrictions will be in force during this curfew tamilnadu which came into effect across the state today Sunday

இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. வார இறுதி நாட்களில்(வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில்) கோயில்களில் வழிபாடு செய்ய அனுமதி இல்லை.அதன்படி இன்று பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை. சென்னையில் புநகர் ரயில் சேவைகள் இயக்க அனுமதி. இன்று (9-1-2022) மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம்,இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம்,இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.அவ்வாறு பயணிக்கும் போது,பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று டாஸ்மாக் கடைகள் செயல்பட தடை. அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் இன்றைக்குள் (9.1.2022-க்குள்) கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருந்திருக்க வேண்டும், அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்லும்போது அலுவலக அடையாள அட்டை மற்றும் தங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ள வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios