what is the rulebook says

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை காவு வாங்கியது காவல்துறை. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ‘தூத்துக்குடியில் ஜாலியன் வாலாபாக்’ என்றும், ‘அரச பயங்கரவாதத்தின் கொடூர உதாரணம்’ என்றும் பல்வேறு தலைவர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லட்ச லட்சமாய் தமிழர்களை கொன்று இரையாக்கிய இலங்கை ராணுவத்தினரை விட மிகவும் கொடூரமாக வாயில் வைத்து சுட்டுக்கொன்ற இந்த செயல், கொடுங்கோலின் உச்சக்கட்டத்தின் வெளிப்பாடு! என பல்வேறு நாடுமுழுவதும் அரசுக்கு எதிராக எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.

அதேபோல, போராட்டத்தை குதிப்பவர்களை, கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டம் போட்டு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

கமாண்டோக்கள் எல்லாம் வரமாட்டார்கள்.

சீருடை இல்லாமல் எப்படி மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டார்கள்? என பல்வேறு கேள்விகள் எழுகிறது.

இப்படி மிருகத்தனமான, காட்டுமிராண்டித் தனமான தாக்குதளை நிழ்கழ்த்தலாமா? சட்டம் என்ன சொல்கிறது?

1. கூட்டத்தை விலக்க சொல்ல வேண்டும்

2. கண்ணீர் புகை குண்டு வெடிக்க செய்ய வேண்டும்

3. லேசான தடியடி நடத்த வேண்டும்

4. இவை பலன் தராவிட்டால் கலவர கொடியை உயர்த்தி மெகா போனில் முன்னெச்சரிக்கை கொடுத்து வானத்தை நோக்கி சுடவேண்டும்.

5. இறுதியாக இவை யாவும் பலன் தராத போது முழங்காலுக்கு கீழே சுடலாம்.

6. இவையெல்லாவற்றிலும் பழிவாங்கும் நோக்கம் இருக்க கூடாது. என இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.