Asianet News TamilAsianet News Tamil

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை சஸ்பெண்ட் விவகாரத்தில் நடந்தது என்ன.? அமுதா மீது ஸ்டாலின் அதிருப்தியா.?

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை நேற்று முன் தினம் நேற்று ஓய்வு பெற இருந்த நிலையில், திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் அடுத்த சில சில மணி நேரங்களில் மீண்டும் சஸ்பெண்ட் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

What is the reason for revoking the Velladurai suspension order KAK
Author
First Published Jun 1, 2024, 10:53 AM IST | Last Updated Jun 1, 2024, 10:53 AM IST

வெள்ளத்துரை சஸ்பெண்ட் ஏன்.?

சந்தன கடத்தல் வீரப்பன், அயோத்தி குப்பம் வீரமணி என பல குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த வெள்ளத்துரை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குற்ற ஆவண காப்பக கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளரக பணியாற்றி வந்தார். நேற்று பணி ஓய்வு பெற இருந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  

கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை திருப்பாசேத்தியில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட குமார் என்கின்ற கொக்கி குமார் போலீஸ் காவலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கானது மனித உரிமை ஆணையமும் , சிபிசிஐடி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே பணி ஓய்வின் போது சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 

What is the reason for revoking the Velladurai suspension order KAK

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.. ADSP வெள்ளத்துரை பணியிடை நீக்கம் ரத்து - சில மணி நேரத்தில் திடீரென மாறிய உத்தரவு!

சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

இதனிடையே நேர்மையான அதிகாரி என கூறப்படும் வெள்ளைத்துரை மீதான சஸ்பெண்ட் உத்தரவு காவல்துறை மட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், காவலர்கள் பலர் மீது பல  வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதே போன்று அனைத்து காவலர்களையும் செஸ்பெண்ட் செய்ய முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இது போன்ற நடவடிக்கைகள் எடுத்தால் ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் காவலர்கள் எப்படி முன்வருவார்கள் என கூறி வருகின்றனர்.

இதன் காரணமாகவே  வெள்ளைத்துரை மீதான  சஸ்பெண்ட் உத்தரவை நிறுத்தி வைத்து உள்துறை செயலாளர் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மற்றோரு தரப்பில் வெள்ளைத்துரை மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு உள்துறை செயலாளர் அமுதா கொண்டு செல்லப்படவில்லையென  கூறப்படுகிறது.

சிறிதும் கூச்சமே இல்லையா..!! மத்திய அரசு திட்டங்களுக்கு மீண்டும் ஸ்டிக்கர் ஒட்ட முயலும் திமுக அரசு- அண்ணாமலை

What is the reason for revoking the Velladurai suspension order KAK

அமுதா ஐஏஎஸ் மீது அதிருப்தியா.?

இதன் காரணமாக உள்துறை செயலாளர் அமுதா மீது ஸ்டாலின் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியானது. வெள்ளத்துரை சஸ்பெண்ட் தொடர்பாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதை தொடர்ந்து தான்  முதலமைச்சருக்கு தகவல் தெரியவந்ததாக தெரிகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அதிகாரிகள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்திப்பதில் கட்டுப்பாடு உள்ளதால் வெள்ளத்துரை சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்பாக தகவல் தெரிவிக்கவில்லையென கூறப்படுகிறது.

இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரிலேயே வெள்ளத்துரை மீதான சஸ்பெண்ட் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் வெள்ளத்துரை மீது வழக்கு நிலுவையில் உள்ள போது சஸ்பெண்ட் செய்யப்படாமல் பணி ஓய்வு பெற அனுமதித்தால் உள்துறை செயலாளர் மீது தான் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என தலைமை செயலாக வட்டாரமத்தில் பேசப்பட்டு வருகிறது.  

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios