Asianet News TamilAsianet News Tamil

2 வருடமாக தூக்கம் இல்லாமல் தவித்த கோவை டிஐஜி விஜயக்குமார்.! தற்கொலை செய்து கொண்டது ஏன்.? வெளியான தகவல்

கோவை டிஐஜி விஜயக்குமார் கடந்த இரண்டு வருடங்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், மேலும் தூக்கமில்லாமல் தவித்து வந்த நிலையில்  துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

What is the reason for Coimbatore DIG Vijaykumar suicide
Author
First Published Jul 7, 2023, 9:35 AM IST

கோவை டிஐஜி தற்கொலை

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது முகாம் அலுவலகத்தில் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார். பல்வேறு வழக்குகளில் விரைந்து முடிக்கும் வகையில் செயல்பட்டார். 

What is the reason for Coimbatore DIG Vijaykumar suicide

தற்கொலைக்கு காரணம் என்ன.?

இந்தநிலையில் நேற்று இரவு கோவை ஆணையர் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயக்குமார்,   இதனையடுத்து கோவை பந்தய சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்திற்கு வந்து தங்கியுள்ளார். தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் நடைபயற்சி சென்றவர்,  தனது பாதுகாவலராக இருந்த ரவி என்பவருடைய துப்பாக்கியை வாங்கி கொண்டு தனது அறையை  பூட்டிக்கொண்டுள்ளார்.அப்போது  திடீரென துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது விஜயக்குமார் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். 

What is the reason for Coimbatore DIG Vijaykumar suicide

மன உளைச்சலில் டிஐஜி

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது உடல் கோவை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் அவரது உடல் விஜயகுமாரின் சொந்த மாவட்டமான தேனிக்கு கொண்டு செல்லப் பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் டிஐஜி விஜயக்குமார் கடந்த சில வருடங்களாக தூக்கம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.பணி அழுத்தமாக தற்கொலையா? அல்லது குடும்ப பிரச்சனையா.? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் உண்மை காரணங்கள் விரைவில் தெரியவரும்  என எதிர்பார்க்கப்படுகிறது

இதையும் படியுங்கள்

அதிமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற முயற்சியா?ஆளுநருக்கு எதிராக ஆதாரத்துடன் இறங்கி அடிக்கும் அமைச்சர் ரகுபதி

Follow Us:
Download App:
  • android
  • ios