ஜல்லிக்கட்டு என்றால் எப்போதும் தெம்பாக பதில் சொல்பவர் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அவருக்கு அப்ப ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சு கிடையாது. எப்போதும் ஒரே பேச்சுதான். ஜல்லிக்கட்டு கட்டாயம் கொண்டுவரப்படும். மத்திய அரசு கட்டாயம் கொண்டுவரும் என்றனர்.
இவர் பேச்சுக்கு தப்பாமல் தாளம் போடுபவர் பொன் ராதாகிருஷ்ணன். இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டை 2016 ஆம் ஆண்டு பொங்கலுக்குள் கொண்டுவருவதாக அடித்து சொன்னார்கள். இதற்கு ஆதரவாக ஜவ்டேகரை அழைத்து வந்தார்கள். அவரும் ஆமாம் சாமி போட்டார். ஆனால் போன வருடம் எதுவும் நடக்கவில்லை.
இதனால் கடுப்பில் இருக்கும் தமிழக மக்களிடம் கடந்த 10 மாதங்களாக ஜல்லிக்கட்டு கட்டாயம் கொண்டுவருவோம் என்று அடித்து சொல்லி வருகின்றனர். ஆனால் இன்று சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்பவும் ஜல்லிக்கட்டு பற்றி ஒரே பேச்சையே திரும்ப திரும்ப பேசி வருகிறார் தமிழிசை.
இப்பவும் அவர் சுருதி குறையவில்லை கட்டாயம் ஜல்லிக்கட்டு வந்தே தீரும் கொண்டு வந்தே தீருவோம் என்று இன்றும் அடித்து சொல்கிறார். இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் . கட்டாயம் மத்திய அரசு சட்டம் கொண்டு வரும் என்று கூறினார் . அப்படியானால் இந்த கூட்டத்தொடரில் மசோதா பட்டியலில் அது இல்லையே என்று கேட்டபோது திணறிப்போனார்.கொள்கை ரீதியாக அரசு முடிவெடுத்துள்ளது என்று சமாளித்தார்.
மு.க.ஸ்டாலின் மத்திய அரசால் ஜல்லிக்கட்டை கொண்டுவர முடியாது என்று கூறுவதை வன்மையாக கண்டிப்பதாக கூறிய கடந்த முறை நாங்கள்தான் தனிச்சட்டம் கொண்டு வந்தோம் என்று தெரிவித்தார்.
