Weather Center Warning

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார். 

அடுத்த இரண்டு நாட்களுக்கும் இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில முறை இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகம் ஒட்டிய கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை, டிஜிபி அலுவலகத்தில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மெரினா கடற்கரையில் மழைநீர் தேங்கியுள்ளது. 

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

* டிஜிபி அலுவலகம் (மைலாப்பூர், மெரினா கடற்கரை அருகே) - 296 மி.மீ.

* அண்ணா பல்கலைக்கழகம் (கிண்டி) - 213 மி.மீ.

* சத்யபாமா பல்கலைக்கழகம் (சோழிங்கநல்லூர்) - 204 மி.மீ.

* சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பாரிஸ்) - 199 மி.மீ.

* இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (கேளம்பாக்கம்) - 193 மி.மீ.

* தரமணி - 193 மி.மீ.

* நுங்கம்பாக்கம் (சென்னை) - 183 மி.மீ.

* மீனம்பாக்கம் (சென்னை விமான நிலையம்) - 142 மி.மீ.

* தண்டையார்பேட்டை - 138 மி.மீ.

* அயனாவரம் - 120 மி.மீ.

* திருப்போரூர் - 115 மி.மீ.

* பெரம்பூர் - 115 மி.மீ.

* மகாபலிபுரம் - 112 மி.மீ.

* புழல் - 91 மி.மீ.

* சோழவரம் ஏரி - 86 மி.மீ.

* செங்குன்றம் ஏரி - 81 மி.மீ.

* பொன்னேரி - 77 மி.மீ.

* அம்பத்தூர் - 72 மி.மீ.

* தாமரைப்பாக்கம் - 71 மி.மீ.

* செம்பரம்பாக்கம் - 69 மி.மீ.

* கும்மிடிபூண்டி - 61 மி.மீ.