we want seperate department for public distribution system
நாமக்கல்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக உள்ள பொதுவிநியோக திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“ரேசன் கடை பணியாளர்களிடம் ஊதியத்தில் இருந்து பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி தொகையையும், நிர்வாகத்தினர் பங்கையும் உரிய கணக்கில் செலுத்தி பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வழங்க வேண்டும்,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக உள்ள பொதுவிநியோக திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும்” என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேசன் கடை பணியாளர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் தண்டபாணி, ஈரோடு மாவட்டச் செயலாளர் சதாசிவம், கரூர் மாவட்டத் தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிப் பொருளாளர் நெடுஞ்செழியன் இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பணியாளர் ஒன்றிணைப்பு மாநில தலைவர் சுரேஷ்பாபு, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
