மதுரையில் நடைப்பெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில் நடிகர் சிவா குமார், தன்னுடன் ஆசையாக  செல்பி எடுக்க வந்த வாலிபரின் கையில் இருந்த போனை கீழே தட்டி விட்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாக சமூக வலைத்தளத்தில் பரவி, கண்டனத்திற்கு உள்ளானது.

இதனை தொடர்ந்து எப்படியெல்லாம் செல்பி எடுக்க முடியும் என்பதற்கு சான்றாக, இதற்கு முன்னதாக  ஸ்டாலின் தன்னுடைய தொண்டர்களுடன் செல்பி எடுத்த போட்டோ முதல் நடிகர் விஜய் சேதுபதி வரை  அவர்கள் தங்கள் ரசிகர்களுடன் செல்பி எடுத்து வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில், பதிவிட்டு  நடிகர் சிவகுமாரை கிண்டல் செய்யும் பாணியில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து, நடிகர் தன்னுடைய தவறுக்காக மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோவை பதிவு செய்து  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக, நித்யானந்தா பெண்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் தான் வெகு ஜோராக சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் இப்படித்தான் குணமா செல்பி எடுக்க வேண்டும் என்றும்  குறிப்பிடப்பட்டு உள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.