திண்டுக்கல் மாவட்டம், கோயிலூர் அடுத்துள்ளது ஆர்.கோம்பை கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக மோகன்தாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். 

dindukkal க்கான பட முடிவு

இவர் மீது சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை, பாடம் எடுப்பதை விடவும் சங்கப் பணிகளை கவனிப்பதில்தான் அதிக நாட்டம் செலுத்துகிறார் போன்ற புகார்களை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில், தலைமை ஆசிரியர் மோகன் தாஸை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளியை திறக்கவிடாமல் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.  இதுஒருபக்க இருக்க, மற்றொரு பக்கம் தலைமை ஆசிரியரை மாற்றைக் கூடாது என்று கூறி மற்றொரு தரப்பு பொதுமக்கள் போராடினர். 

தொடர்புடைய படம்

தலைமை ஆசிரியரை மாற்றைக் கூடாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் போன வாரம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். நேற்று தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் மனு அளித்தனர்.

அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இருதரப்பினரிடமும் விசாரித்தார். அதில், தலைமை ஆசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் உள்ளூர்க்காரர்கள் என்றும், ஆதரித்தவர்கள் வெளியூர்காரர்கள் என்பதும் தெரிந்தது.

தலைமை ஆசிரியரே ஆட்களை ஏற்பாடு செய்து தனக்கு ஆதரவாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்  மனு கொடுக்க செய்துள்ளார் என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். அதுமட்டுமின்றி, மாணவர்கள் நலனில் அக்கறையற்ற இந்த தலைமை ஆசிரியர் தங்களுக்கு தேவையில்லை என்றும் வலியுறுத்தினர்.