Asianet News TamilAsianet News Tamil

ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு 2 மாதங்களாக காத்திருக்கிறோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநரை சந்திப்பதற்காக 2 மாதங்களாக காத்திருப்பதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

we are waiting past 2 months for governor's approval for mgr university vc selection process says minister ma subramanian
Author
First Published Feb 22, 2023, 3:04 PM IST

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 2022-23 ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 582 பேருக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பணி நியமன ஆணை, மருத்துவ உபகரணம் வழங்கு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கையடக்கக் கணினிகளை வழங்கினார்.

இலவச மடிகணினி

இதனைத் தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், அரசு பள்ளிகளில் படித்த மானவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு கீழ் கையடக்க கணினி 582 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஈரோடு தேர்தல் நடைபெறுவதால் 10 மாணவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் கையடக்க கணினி தரப்படும். அரசு பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரியில் படிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. நான் அரசு பள்ளியில் படித்து தான் இங்கே வந்துள்ளேன். சாவலில் வென்று இந்த நிலைக்கு வந்துள்ள நீங்கள் தான் வாழைக்கையின் வெற்றியாளர்கள்.

நீட் தேர்வில் விலக்கு?

அரசு மருத்துவ கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தான் உலகின் தலைசிறந்த மருத்துவர்களாக உள்ளனர். கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் தான் மக்கள் அதிகம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் போராடி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். மத்திய ஆயுஷ் அமைச்சகம் நீட் விலக்கு குறித்து சில விளக்கங்களை கேட்டுள்ளது. இன்னும் இரண்டு தினங்களில் விளக்கம் அளிக்கபடும் என்றார்.

மருத்துவ துறையில் 1941 கோடியில் திட்டம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்ச மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அடுத்த வாரம் தமிழக முதலமைச்சர் 17 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 1018 கோடியே 80 லட்சம் மதிப்பில் பணிகளை துவக்கி வைக்கிறார். ரூபாய் 15 கோடி செலவில் 12 ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் 12 இடங்களில் 145 கோடி செலவில் கட்டப்பட உள்ளது, 10 இடங்களில் 50 படுக்கைகளுடன் கூடிய புதிய கட்டமைப்பை உருவாக்க  237 கோடியே 50 லட்சம் செலவில் தொடங்கப்பட உள்ளது என்று கூறிய அவர் மேலும் 80 கோடி மதிப்பில் 100 படுக்கைகளுடன் கூடிய 2 மருத்துவ கட்டமைப்பு கட்டிடங்கள், அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனை ஏற்கனவே  125 கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்டு வருகிறது மேலும் 100 கோடி ரூபாய்கு புதிய கட்டிடம் கட்டும் பணியையும் முதல்வர் துவக்கி வைக்கிறார் என்றார்.

மருத்துவ மாணவியின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றிய உறவுக்கார பெண் கைது

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 65 கோடி செலவில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடத்தையும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியார் மருத்துவமனையில் 72 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டிடங்களும், உபகரணங்களும் வழங்கப்பட உள்ளன. மருத்துவத்துறையின் வரலாற்றில் ஒரே நாளில் 1941 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டமைப்பு துவக்க பணிகள் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்தார்.

துணைவேந்தர் நியமனம்

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியோடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவமனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு முடிவு பெற்றது. பின்னர் முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி கடந்த ஜனவரின் 4ம் தேதி முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் அடங்கிய தேடுதல் குழு உருவாக்கப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டது. 

கல்லூரி மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை முயற்சி; படுகாயங்களுடன் அனுமதி

அந்தக் குழு அமைத்து இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் ஆளுநர் தான் இனி அந்த குழுவிற்கு வழி காட்ட வேண்டும். ஆளுநரின் சார்பில் அந்தக் குழுவிற்கு அலுவலர் ஒருவரை நியமிப்பார்கள். அந்த பணிகள் முடிந்த பிறகு அந்த தேடுதல் குழுவானது 3 நபர்களை தேர்ந்தெடுத்து ஆளுநரிடம் வழங்கும். இந்த குழுவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு 2 மாதங்களாக காத்திருக்கிறோம். அவருடன் இணக்கமாக செல்லவேண்டும் என்பதற்காக தான் நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios