கல்லூரி மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை முயற்சி; படுகாயங்களுடன் அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கலை அறியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் மாணவி 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்று படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஒட்டன்சத்திரம் தாலுகா பழைய பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன், பழனியம்மாள் தம்பதியின் மகள் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் இன்று கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கீழே குதித்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரி மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கல்லூரியில் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
படகில் கமலாலயம் சென்ற முதல்வர்; நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரிக்கு விடுமுறை அளிப்பது குறித்து காவல்துறையினர், கோட்டாட்சியர் மற்றும் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். மாடியில் இருந்து கல்லூரி மாணவி குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.