Asianet News TamilAsianet News Tamil

நாங்களும் மனிதர்கள்தான்! அரசு மருத்துவமனையை நாடக்கூடாதா? ஆட்சியரை அடுத்து நீதிபதி...!

We are human beings do not we have a government hospital? - Justice Magalakshmi
"We are human beings, do not we have a government hospital?" Justice Magalakshmi
Author
First Published Feb 8, 2018, 5:44 PM IST


அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியாவைத் தொடர்ந்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமியும், அரசு மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அவரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் உட்பட பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா, குடல் வால் அறுவை சிகிச்சையை அரசு மருத்துவமனையில் செய்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம், குடல் வால் அறுவை சிகிச்சையை அவர் எடுத்துக் கொண்டார். அப்போது பேசிய ஆட்சியர் லட்சுமி பிரியா, அரசு மருத்துவமனையின் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் உணர்த்துவதற்காக சிகிச்சை மேற்கொண்டதாக கூறி, அனைவரது பார்வையும் அரசு மருத்துவமனையின் மீது
திருப்பினார். ஆட்சியர், இந்த சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது. இதையடுத்து, ஆட்சியர் லட்சுமி பிரபாவை பொதுமக்கள் உள்ளிட் பலரும் வெகுவாக பாராட்டினர்.

"We are human beings, do not we have a government hospital?" Justice Magalakshmi

இந்த நிலையில், அரியலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி, அரியலூர் அரசு மருத்துவமனையில் குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

நீதிபதி மகாலட்சுமி, அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, சிகிச்சை பெற்று வருவது குறித்து அறிந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசு மருத்துவர்களை வெகுவாக பாராட்டினர். மக்களோடு மக்களாக, அரசு மருத்துவமனைக்கு வந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட நீதிபதி மகாலட்சுமியையும் அவர்கள் பாராட்டி வருகின்றனர்.

"We are human beings, do not we have a government hospital?" Justice Magalakshmi

நீதிபதி மகாலட்சுமியிடம், அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் பார்க்கலாமே என்ற கூறியிருக்கின்றனர். அதற்கு, ஏன் நீதிபதி, அரசு 
மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக் கொள்ளக் கூடாதா? நீதிபதி என்பவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. நாங்களும் மனிதர்கள்தான். எங்களைப் போன்றவர்கள் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்தால், மக்கள் மத்தியில் அரசு மருத்துவமனையின்மீது நல்ல மதிப்பு ஏற்படும். இலவசமாக கிடைக்கும் எந்த ஒரு பொருளுக்கும் மதிப்பு இருக்காது. அதுபோலதான் அரசு ஊழியர்களும், தனியார் மருத்துவமனையைப் புறக்கணித்து அரசு மருத்துவமனையை நாட வேண்டும் என்று நீதிபதி மகாலட்சுமி கூறியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios