Asianet News TamilAsianet News Tamil

குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்…முதலமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு..

water can producers protest withdrawn
water can producers protest withdrawn
Author
First Published May 29, 2017, 10:34 PM IST


குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்…முதலமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு..

கடந்த இரண்டு நாட்களாக சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடைபெற்று வந்த குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் போராட்டம் இன்று இரவி திரும்பப் பெறப்பட்டது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 350 குறு குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த உற்பத்தி நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதாக கூறி சில நிறுவனங்களை அரசு ‘சீல்’ வைத்து மூடியுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு குடிநீர் கேன் மீது 18 சதவீதம் சரக்கு சேவை வரி விதித்து இருக்கிறது.  மாநில அரசின் நடவடிக்கையை கண்டித்தும், மத்திய அரசின் வரி விதிப்பை கைவிட வலியுறுத்தியும் நேற்று முதல் தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

water can producers protest withdrawn

தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தினை கைவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.

இந்த நிலையில், தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  மலை பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்த  போராட்டம் திரும்ப பெறப்பட்டது.  தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களிடம் முதலமைச்சர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக  அறிவிக்கப்பட்டது
.

Follow Us:
Download App:
  • android
  • ios