திராவிட மாடல் அரசானது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால் திமுக அரசோ மத மோதலை உருவாக்கக் கூடிய அரசாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக வளர்ச்சி குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திரைத்துறையில் பொதுவானவர்களை அரசு நிகழ்ச்சிக்கு வற்புறுத்தி கட்டாயப்படுத்தி வருகை தர வைத்து அரசு சாதனைகளை பேச வற்புறுத்தி உள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்குவதாக கூறி வெறும் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே கண் துடைப்புக்கு லேப்டாப் வழங்கியுள்ளனர், பராசக்தி படத்தில் வசனம் எழுதி பிழைத்த கருணாநிதி, தற்பொழுது குடும்ப அரசியல் வளர்ச்சி காரணமாக அவரின் பேரன் புதிய பராசக்தி படத்தை இன்பநிதி வெளியிடுகிறார், அந்த அளவிற்கு குடும்ப ஆட்சி வளர்ச்சி காரணத்தை காட்டுகிறது, மேலும் மீண்டும் கனிமொழியை மாநில அரசியலில் ஈடுபட நினைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்,

செங்கோட்டையன் ஒரு காலாவதியான மாத்திரை அது முடிந்து போன ஒன்று, இவர்கள் போன்றவர், செல்வாக்கை இழந்தவர்கள் எல்லோரும் தவெக்கவிற்கு செல்வதால் அந்த கட்சியும் வளராது, அதிமுகவிற்கும் எந்த சேதாரமும் கிடையாது. நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தி இருக்க வேண்டும், மத மோதலை ஏற்படுத்த நினைக்கிறது. இந்த திராவிட மாடல் அரசு, அனைவருக்கும் ஒன்றான அரசாக செயல்படுவதில்லை,

தேர்தலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் பொங்கலுக்கு குடும்ப அட்டைக்கு ரூ.3000 வழங்குவதாக அறிவித்துள்ளனர். இது தேர்தலுக்கு எடுபடாது” என தெரிவித்துள்ளார்.