தி வாரியர்ஸ் ஆர் பேக்! நாளுமன்றத்தில் நுழைந்தவுடன் இந்தியா கூட்டணி பெண் எம்.பி.க்கள் போட்ட ட்வீட் வைரல்!
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, திமுக எம்.பி. கனிமொழி, டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் இந்தப் புகைப்படத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, "தி வாரியர்ஸ் ஆர் பேக்" (போராளிகள் திரும்ப வந்துவிட்டார்கள்) என்று குறிப்பிட்டு இந்தப் படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இத்துடன் 2019ஆம் ஆண்டு இதேபோல எடுத்த படத்தையும் இணைத்துள்ளார். அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதி திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவும் இதே வாசகத்துடன் இரண்டு படங்களையும் பதிவிட்டுள்ளார்.
'கேரளம்' ஆகும் கேரளா! மாநிலத்தின் பெயரை மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி எம்பி டிம்பிள் யாதவ் வெற்றி பெற்றார். 2019 குரூப் போட்டோவில் இல்லாத அவர், இந்த ஆண்டு குரூப் போட்டோவில் இடம்பெற்றுள்ளார். டிம்பிள் யாதவ் மெயின்புரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
கனிமொழி தமிழ்நாட்டின் தூத்துக்குடி தொகுதியையும், சுப்ரியா சுலே மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியையும் வென்றனர். ஜோதிமணி தமிழகத்தின் கரூரில் வெற்றி கண்டார். தமிழச்சி தங்கபாண்டியன் சென்னை தெற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டிம்பிள் யாதவ் உத்தரபிரதேசத்தின் மெயின்புரி தொகுதி எம்.பி.யாகி இருக்கிறார்.
2024 மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையில் சிறிதளவு குறைந்துள்ளது, 2019 இல் 78 பெண் எம்.பி.க்கள் இருந்தனர். இப்போது 74 பெண் எம்.பி.க்கள் உள்ளனர். அதிகப்பட்சமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 பெண் எம்.பி.க்கள் மக்களவையில் இடம்பெற்றுள்ளனர்.
வேலையே செய்யாத ஊழியருக்கு முழு சம்பளம் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட நிறுவனம்!