மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான் நமக்கு உண்மையான பிக் பாஸ் என நடிகர் விவேக்தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி அப்துல் கலாமின் நினைவு மணிமண்டபம் அவரது சொந்த ஊரான ராமேஷ்வரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இதை பிரதமர் மோடி இன்று நேரில் திறந்து வைத்தார். மேலும் மணிமண்டபத்தில் உள்ள அப்துல் கலாம் சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார்.

மேலும் அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அப்துல்கலாமின் புகைப்படம் மற்றும் சிலைக்கு தமிழகம் முழுவதும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சேலம் அம்மாபேட்டையில் தனியார் பள்ளியின் சார்பில் அப்துகலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த விவேக், அப்துல் கலாம் நினைவாக பசுமை கலாம் திட்டம் மூலம் ஒரு கோடி மரங்கள் நட திட்டமிட்டுள்ளதாகவும், அப்துல் கலாம்தான் நமக்கு உண்மையான பிக் பாஸ் எனவும் தெரிவித்தார்.