Virudhunagar Accident : விருதுநகர் அருகே சென்றுகொண்டிருந்த கார் அருகில் இருந்த தரைப்பாலத்தில் மோதி பள்ளத்தில் விழுந்து தீ பிடித்து எரிந்துள்ளது.

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 55), இவரது மகன் ரோஹித் (21). இவர்கள் இருவரும் ஒரு காரில் கன்னியாகுமரி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் விருதுநகர் அருகே துலுக்கப்பட்டி விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது தரைப்பாலத்தில் திடீரென கார் மோதி பள்ளத்தில் உருண்ட விபத்தில் கார் திடீரென தீப்பிடித்தது. இதில் காரை ஓட்டி வந்த நபர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

ரோகித் மற்றும் சசிகுமார் ஆகியோரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் உயிர் இழந்த கார் ஓட்டுநர் குறித்து வச்சகாரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.