தேசியக் கொடியை குப்பையில் போடச் சொல்லி ஒருவர் கலாட்டா செய்த வீடியோ வைரலாகி வருகிறது

கும்பகோணம் ரயில் நிலையத்தில் தேசியக் கொடியை குப்பையில் போடச் சொல்லி ஒருவர் கலாட்டா செய்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் தொப்பி அணிந்த ஒருவர், கேரளாவை சேர்ந்த பயணி ஒருவரிடம் இருந்து இந்திய தேசியக் கொடியை பிடுங்கி அதனை குப்பை தொட்டியில் வீச முற்படுகிறார்.

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தேசியக் கொடியை பத்திரமாக மீட்டு கேரளாவை சேர்ந்த பயணியிடம் ஒப்படைத்தனர். தேசியக் கொடியை குப்பையில் வீச முயன்றவர் யார்? அவரது பெயர் என்ன? எதற்காக அப்படி செய்தார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Scroll to load tweet…

அதேசமயம், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் மற்றும் கும்பகோணம் போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் நிலையத்தில் தேசியக் கொடியை குப்பையில் போடச் சொல்லி ஒருவர் கலாட்டா செய்தது அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்: பிரதமர் மோடி பெருமிதம்!

இதனிடையே, இதுதொடர்பான வீடியோ வைரலானது தேசியக் கொடியை அவமதித்த அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.