விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு.. மதுரை கிளை உத்தரவு..
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனால் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறுகின்றன.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனால் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறுகின்றன.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளிலும் வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு.. கைதான பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் ஜாமினில் வெளியே வந்தனர்.
அதன்படி, விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குட்கா, மதுபானங்கள் போன்ற போதைப்பொருட்களை உட்கொள்ளக் கூடாது என்றும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது ஆபாச நடனமோ, அநாகரிமான உரையாடல்களோ இடம் பெற கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.அரசியல் கட்சி, மதம் , சமூகம், சாதிகள் குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ, நடனமோ இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் மற்றும் மதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேனர்களும் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க:மக்களே உஷார் !! 4 நாட்களுக்கு விடாது ஊற்றப் போகும் மழை.. இன்று 16 மாவட்டங்களில் கனமழை
விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு விழா ஏற்பாட்டளர்களும் வழக்குத் தாக்கல் செய்தவர்களுமே பொறுப்பு என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிமன்ற கட்டுப்பாடுகளை ஒன்றை மீறினாலும் நிகழ்ச்சியை நிறுத்தி காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.