கடலூர்
 
கடலூரில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் துறைமுகம் அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் ஐந்தாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

எனினும், "துறைமுகம் அமைக்க கூடாது" என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பதால் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று 5-வது நாளாக இப்போராட்டம் தொடர்ந்தது. இதில் பெண்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் போராட்டம் பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. பாண்டியன் நேற்று புதுக்குப்பத்துக்கு சென்றார். அங்கு கிராம மக்களுடன் அமர்ந்து, அவர்களது கோரிக்கையை கேட்டறிந்தார். அதன்பின்னர் அவர், "இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.