village people siege collector office asking drinking Water

திருவண்ணாமலை

சீரான குடிநீர் கேட்டு திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம மக்கள் கொடுத்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இது தொடர்பாக உரிய நடவடிக்கையை உடனே எடுப்பதாக உறுதியளித்தார். இதனையேற்றுக் கொண்ட மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.