Asianet News TamilAsianet News Tamil

கிராம உதவியாளர் தேர்வின் வினாதாள் கசிவு... ரூ.10,000க்கு விற்பனை செய்ததால் சர்ச்சை!!

மதுரையில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வின் வினாத்தாள் கசிந்தது மட்டுமின்றி 10 ஆயிரம் ரூபாய்க்கு வினாத்தாள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

village assistant exam question paper leaked and sold for ten thousand at madurai
Author
First Published Dec 4, 2022, 11:46 PM IST

மதுரையில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வின் வினாத்தாள் கசிந்தது மட்டுமின்றி 10 ஆயிரம் ரூபாய்க்கு வினாத்தாள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் காலியாக இருந்த 2 ஆயிரத்து 748 பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அந்த வகையில் மதுரையிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க: இந்த வழக்களில் கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது... அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்!!

அந்த அறிவில், மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து கடந்த நவம்பர் 7 ஆம் தேதி முதல் கிராம உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த பணிக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில் மதுரையில் 22 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு காலையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிக்கான எழுத்தறிவு தேர்வு நடைபெற இருந்தது.

இதையும் படிங்க: ஜி20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு…டெல்லி செல்கிறார் ஸ்டாலின்… ஈபிஎஸ் செல்வாரா?

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கிராம உதவியாளர் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறப்பட்டது. தேர்வின் வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாக தெரிக்கப்பட்டது. மேலும் முழுமையான வினாத்தாளை பெற 10 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம், அதிர்ச்சியடைந்தது. மேலும் வினாத்தாள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுமட்டுமின்றி புதிதாக தயாரிக்கப்பட்ட வினாத்தாளர்கள் மூலம் தேர்வு நடத்தப்படும் என்றிம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios