Asianet News TamilAsianet News Tamil

இந்த வழக்களில் கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது... அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்!!

போக்சோ வழக்களில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். 

dgp sylendra babu instructs officers that no arrest should be made in pocso cases
Author
First Published Dec 4, 2022, 11:01 PM IST

போக்சோ வழக்களில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்களில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது.

இதையும் படிங்க: ஜி20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு…டெல்லி செல்கிறார் ஸ்டாலின்… ஈபிஎஸ் செல்வாரா?

அதற்கு பதிலாக, கு.வி.மு.ச பிரிவு 41(4) ன் படி சம்மன் அனுப்பி எதிரிகளை எதிர் மனுதாரரை விசாரணை செய்யலாம், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்யப்படவேண்டும். 

இதையும் படிங்க: சமூக வலைதளங்கள் முன்னேற்றத்தை மிகவும் பாதிக்கும்… ஏ.எஸ்.ராஜன் கருத்து!!

முக்கிய வழக்குகளில், இறுதி அறிக்கையினை (குற்றப்பத்திரிக்கை)உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிர ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios